PMK: பாமக வில் உட்கட்சி மோதல் போக்கானது தீவிரமடைந்து வருகிறது. அப்பா மகன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அது தலைமை பதவியை பங்கபோடும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது இளைஞரணி தலைவர் பதவிக்கு மகள் வழி பேரனான முகுந்தனை ராமதாஸ் நியமித்ததை அடுத்து அன்புமணிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. இதன் எதிர்ப்பை பொதுக்கூட்டம் ஒன்றிலேயே வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு நான் தான் கட்சித் தலைவர் அன்புமணி கிடையாது என்ற அறிவிப்பையும் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். ஒரு சில தினங்கள் மௌனம் காத்த அன்புமணி, அனைத்து நிர்வாகிகள் தலைமையில் நான் தான் தேர்வு செய்யப்பட்டேன், அதனால் தலைமை பதவி எனக்கு தான் என்று பதிலுக்கு அவரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கையில் இருவரும் மனம் ஒத்து சித்திரை பௌர்ணமி முழுநிலவு மாநாட்டை வெற்றி கரமாக நடத்து முடித்தனர்.
இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல முகுந்தனுக்கும் இந்த மாநாட்டில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தவே தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவதாக ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் நேற்று முதல் நாளிலேயே வெறுமனே பத்து நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அன்புமணியும் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாவது நாளான இன்று வழக்கம் போல் அன்புமணி இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளார். அதேபோல பாமக முக்கிய நிர்வாகிகள் பலரும் அன்புமணி பின்னணியில்தான் இருக்கின்றனர். மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். உட்கட்சிக்குள் இப்படி மோதல் போக்கு இருக்கும்போது எப்படி வெற்றி பெற முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.