முகத்தில் உள்ள தேவையில்லா முடிகளை அகற்ற அற்புதமான டிப்ஸ் இதோ!!

Photo of author

By Divya

முகத்தில் உள்ள தேவையில்லா முடிகளை அகற்ற அற்புதமான டிப்ஸ் இதோ!!

Divya

பெண்களுக்கு கூந்தல் அவர்களின் அழகை கூட்டுகிறது.ஆனால் முகத்தில் வளரும் முடி அவர்களின் அழகை கெடுகிறது.உதடு,தாடை போன்ற இடங்களில் ஆண்களை போன்ற மீசை,தாடி முடி வளர்ந்தால் அது அவர்களின் அழகை பாழாக்கிவிடும்.இந்த தேவையற்ற முடிகளை அகற்ற வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம.

முகத்தில் முடி வளர காரணங்கள்:

1)ஹார்மோன் பிரச்சனை
2)மாத்திரை பக்க விளைவு
3)ஆரோக்கிய குறைபாடு

தீர்வு:

மஞ்சள்
எலுமிச்சை சாறு
தேன்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை மஞ்சள் தூளில் பிழிந்துவிட வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இப்படி செய்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் கொட்டவிடும்.

எலுமிச்சை சாறு
சர்க்கரை

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் மீசை,தாடி மீது தடவி நன்றாக உலரவிட வேண்டும்.இவை நன்றாக காய்ந்த பிறகு முகத்தை கழுவி சுத்தம் செய்யலாம்.

பாசி பருப்பு மாவு
சர்க்கரை
முட்டையின் வெள்ளைக்கரு

கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பாசி பருப்பு மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.இதை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவினால் மீசை,தாடி முடி உதிர்ந்துவிடும்.