இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

Photo of author

By Divya

இந்திய வேளாண் துறையில் 580+ காலிப்பணியிடங்கள்!! உதவிப் பேராசிரியர் பணிக்கு அழைப்பு!!

Divya

நம் இந்திய வேளாண் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி காலியாக உள்ள உதவிப் பேராசியர் மற்றும் சீனியர் டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 582 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: இந்திய வேளாண் துறை(விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்கள்)

பதவி:

உதவிப் பேராசியர் – 41
சீனியர் டெக்னிக்கல் – 83
அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் சைன்டிஸ்ட் – 458

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த பேராசியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 21 முதல் 32 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

உதவிப் பேராசியர்,சீனியர் டெக்னிக்கல்,அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் சைன்டிஸ்ட் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.57,000/- முதல் ரூ.1,82,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் நெட் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

முதல்நிலை தேர்வு: செப்டம்பர் 02

முதன்மை தேர்வு: டிசம்பர் 07

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1000/-

இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் www.asrb.org.in என்ற இணையதள பக்கத்தில் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

21/05/2025