புதுச்சேரியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் இருந்து வேலைவாய்ப்பு தொடரான தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: புதுவை அரசு வேலை

நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

பதவி: கிராம நிர்வாக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: புதுவை

கல்வித் தகுதி:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மூலம் பணியமர்த்தபட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.