நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி
காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு,ஒடிசா,குஜராத்,மேற்கு வங்கம்,பஞ்சாப்,மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.
வேலை வகை: அரசு வங்கி வேலை
நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 400
கல்வித் தகுதி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு 20 முதல் 30 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம்:
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,000/- முதல் ரூ.85,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
ஆன்லைன் தேர்வு
நேர்முக எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31/05/2025
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற பணிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.