உங்கள் முகத்தில் வந்துள்ள கருவளையம்,கருமை நீங்கி எப்பொழுதும் முகம் பிரகாசமாக இருக்க வெட்டி வேர்,மஞ்சள் தூள்,ரோஸ் வாட்டர் போன்ற பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:-
1)வெட்டி வேர்
2)பசும் பால்
3)கஸ்தூரி மஞ்சள்
4)ரோஸ் வாட்டர்
செய்முறை விளக்கம்:-
முதலில் 20 கிராம் வெட்டி வேரை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த பொடியை கொட்டி கொள்ள வேண்டும்.
பிறகு அதில் காய்ச்சாத பசும் பால் கால் தேக்கரண்டி ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
பிறகு அரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.குறிப்பாக கண்களை சுற்றி இந்த பேஸ்டை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
இவை நன்றாக உலர்ந்த பிறகு தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.இப்படி செய்தால் கருவளையம,முகக் கருமை நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள:-
1)வெட்டி வேர்
2)கோரைக்கிழங்கு
3)மஞ்சள் தூள்
செய்முறை விளக்கம்:-
முதலில் வெட்டி வேர்,கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள்.இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணம் போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலக்குங்கள்.இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கருமை ஏற்படாமல் இருக்கும்.