தலையில் உள்ள பித்த நரையை கருமையாக மாற்ற செயற்கை ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.கடைகளில் கிடைக்கும் இரசாயனம் நிறைந்த ஹேர் டையை தவிர்த்துவிட்டு நமது வீட்டிலேயே அருமையான நேச்சுரல் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.
இந்த ஹோம் மேட் ஹேர் டை தலைமுடியை கருமையாக மாற்றுவதோடு முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)மருதாணி பொடி – மூன்று ஸ்பூன்
2)காபி தூள் – அரை ஸ்பூன்
3)நெல்லிக்காய் பொடி – இரண்டு ஸ்பூன்
4)கிராம்பு பொடி – கால் ஸ்பூன்
5)தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
6)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
7)தயிர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் மூன்று தேக்கரண்டி மருதாணி பொடி போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அரை ஸ்பூன் காபி தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்க்க வேண்டும்.இதனுடன் கால் ஸ்பூன் கிராம்பு தூள் சேர்க்க வேண்டும்.
அதற்கு அடுத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு,ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.கெட்டி படாமல் நன்றாக கலக்க வேண்டும்.
இதை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இப்படி மாதம் இருமுறை செய்து வந்தால் பித்த நரை கருமையாக மாறும்.இந்த ஹேர் டை தலைமுடியை இயற்கையான முறையில் கருமையாக மாற்ற உதவுகிறது.பித்த நரை மட்டுமின்றி செம்பட்டை முடியையும் கருமையாக மாற்ற இந்த ஹேர் டை பயன்படுத்தலாம்.