DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது ஒன்பது மாதங்களில் வர உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதிலும் பாஜக மறைமுகமாக திமுகவை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர். அமலாக்கத் துறையை வைத்து ஒவ்வொரு முக்கிய இலக்கா அமைச்சர்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அப்படித்தான் அமைச்சரவையில் இருந்து முக்கிய மூன்று பேர் மாற்றம் செய்யப்பட்டது.
அதிலும் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான செந்தில் பாலாஜி பதவி விட்டு விலகியுள்ளார். இப்படி இருக்கையில் அடுத்த அடி துணை முதலமைச்சருக்கு கொடுக்க திட்டம் தீட்டிள்ளனர். அந்த வகையில் மதுபான ஆலைகளில் ஊழல் நடந்துள்ளதால் இது ரீதியாக அதன் இயக்குனர் விசாகன் மற்றும் தனியார் மதுபான நிறுவனங்களின் நிர்வாகிகள் தொழிலதிபர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதோடு டாஸ்மாக்கின் முன்னாள் மண்டல மேலாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதிலும் குறிப்பாக சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் தொழிலதிபர், ரித்தீஷ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி முன்னிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் சோதனை செய்ய அமலாக்கத்துறை சென்றபோது அவர் இறுதி வரை வீட்டிற்கு வரவில்லை அப்படியே தலைமறைவாகிவிட்டார்.
இவரையடுத்து தயாரிப்பாளர் ஆகாஷூம் இந்தியாவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உதயநிதியின் நெருங்கிய சிநேகிதர்கள் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை அவர் மீது திரும்பும் எனக் கூறுகின்றனர்.