முகத்தில் பெரும் பருக்கள் இருக்கா? இந்த இலையில் தீர்வு இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

முகத்தில் பெரும் பருக்கள் இருக்கா? இந்த இலையில் தீர்வு இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க!!

Divya

ஆண்,பெண் அனைவரது முகத்திலும் முகப்பருக்கள் வருகிறது.குறிப்பாக எண்ணெய் சருமத்தில் பருக்கள் சற்று அதிகமாகவே தோன்றுகிறது.இந்த முகப்பருக்களை மறைய வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பிரியாணி இலை – ஒன்று
2)இலவங்கப்பட்டை – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் ஒரு பிரியாணி இலை மற்றும் இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

படி 02:

பிறகு இதை மிக்ஸி அல்லது உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த பேஸ்டை கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

படி 03:

இதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்த பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம்.இப்படி செய்தால் முகப்பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)க்ரீன் டீ பேக் – ஒன்று
2)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு க்ரீன் டீ பேக் போட்டு கொதிக்க வையுங்கள்.

படி 02:

ஒரு கிளாஸ் தண்ணீர் சுண்டி அரை கிளாஸ் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆறவைக்க வேண்டும்.

படி 03:

அடுத்து காட்டன் பஞ்சை அதில் நினைத்து பருக்கள் மீது தடவினால் அவை நாளடைவில் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கஸ்தூரி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
2)ரோஸ் வாட்டர் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

கிண்ணம் ஒன்றில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.அறைய தேக்கரண்டி அளவு சேர்த்தால் போதுமானது.

படி 02:

அடுத்து அதில் அரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள்.

படி 03:

பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தப்படுத்துங்கள்.இப்படி செய்தால் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கும்.