உங்கள் பாத்ரூமில் படிந்திருக்கும் அழுக்கு கறைகளை நீக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை பண்ணுங்க.
தேவைப்படும் பொருட்கள்:-
1)சீகைக்காய் – ஒரு தேக்கரண்டி
2)ஷாம்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு சீகைக்காய் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஷாம்பு போட்டு நுரை வரும் அளவிற்கு கலக்க வேண்டும்.
பிறகு ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துள்ள ஷாம்பு கலவையை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
இதை பாத்ரூமில் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன் பிறகு பிரஷ் கொண்டு பாத்ரூமை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் பாத்ரூமில் படிந்துள்ள மஞ்சள் கறை,அழுக்கு கறை உடனடியாக நீங்கிவிடும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)ஷாம்பு – ஒரு பாக்கெட்
2)வினிகர் – ஒரு தேக்கரண்டி
3)சோப் தூள் – கால் தேக்கரண்டி
4)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு பாக்கெட் ஷாம்பு ஊற்றி கலக்க வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் ஊற்றி கலக்க வேண்டும்.பின்னர் கால் தேக்கரண்டி சோப் தூள்,ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு பிரஷ் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் மஞ்சள் கறை,பாசிக் கறைகள் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – மூன்று தேக்கரண்டி
2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
3)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் மூன்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு பக்கெட் நீரில் கலந்து பாத்ரூம் முழுவதும் ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து பிரஷ் வைத்து பாத்ரூம் கறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை இப்படி செய்தால் பாத்ரூம் பளிச்சிடும்.