தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இதற்கு முன் விதிக்கப்பட்ட முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் எதுவும் உண்மையல்ல என்றும், மக்கள் அந்த தகவலை நம்ப வேண்டாம் எனவும், மேலும் கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.