நமது வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் சாம்பிராணியை இனி கடையில் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.காய்ந்த மலர்கள்,ஏலக்காய் உள்ளிட்ட நான்கு பொருட்களை வைத்து எளிய முறையில் சாம்பிராணி செய்யலாம்.
வீட்டு முறையில் சாம்பிராணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய்
2)இலவங்கம்
3)சூடம்(கற்பூரம்)
4)ரோஜா இதழ்கள்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பன்னீர் ரோஜாவாக இருந்தால் இன்னும் சிறப்பு.
அடுத்து 10 ஏலக்காய்,10 கற்பூரம் மற்றும் 10 இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை கிண்ணம் ஒன்றில் கொட்டி ரோஸ் வாட்டர் சிறிதளவு தெளிக்க வேண்டும்.அதன் பிறகு கொழுக்கட்டை மாவு போன்று கலந்துவிட வேண்டும்.
பிறகு ஏதேனும் அச்சு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இதை நிழல் பாங்கான இடத்தில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஈரமில்லாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாம்பிராணியை பூஜைக்கு பயன்படுத்தலாம்.கடையில் கிடைக்கும் சாம்பிராணியைவிட வீட்டு முறையில் தயாரிக்கப்படும் இந்த சாம்பிராணி அதிக வாசனை நிறைந்தவையாக இருக்கும்.
இந்த சாம்பிராணியில் வெட்டி வேர்,சந்தனம் போன்றவற்றை சேர்த்தால் சாம்பிராணி வாசனை இன்னும் அதிகமாக இருக்கும்.அதேபோல் மஞ்சள் கிழங்கு சேர்த்துக் கொண்டால் சாம்பிராணி மணக்கும்.