பெண்கள் முகத்தில் ஆண்களை போன்று முடி இருந்தால் நன்றாக இருக்காது.பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.அப்படி இருக்கையில் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற அதிக செலவு செய்து க்ரீம்,பவுடர் பயன்படுத்த வேண்டாம்.இதற்கு வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள்:-
1)இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு
2)அரை தேக்கரண்டி கடுகு எண்ணெய்
3)கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள்
4)ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால்
செய்முறை விளக்கம்:-
**முதலில் கோதுமையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஜல்லடை கொண்டு சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.
**பிறகு கிண்ணம் ஒன்றில் இந்த கோதுமை மாவை கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அரை தேக்கரண்டி கடுகு எண்ணெயை அதில் ஊற்றி கலக்குங்கள்.
**அடுத்து கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் கிழங்கு பொடியை அதில் சேர்க்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பாலை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
**இந்த கலவை பேஸ்ட் பதம் வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.இதை முகத்தில் வளர்ந்துள்ள தேவையில்லாத முடிகள் மீது அப்ளை செய்து 10 நிமிடங்கள் காயவிட வேண்டும்.பிறகு இதை பெயர்த்தால் தேவையில்லாத முடிகள் அப்படியே நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு
2)ஒரு தேக்கரண்டி சர்க்கரை
செய்முறை விளக்கம்:-
**கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை போட்டு கலந்து கொள்ளுங்கள்.
**அதன் பிறகு காய்ச்சாத பால் சிறிதளவு ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.
**பின்னர் இதனை நல்ல தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை எளிதில் அகற்றிவிடலாம்.