1000 வாங்க வேண்டுமா.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
102

Ration: அந்தியோதயா அன்ன யோஜனா, PHH யின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அதாவது 14ஆம் தேதி சிறப்பு குறைத்தீர்ப்பு முகாமை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிலும் சென்னையில் மண்டலம் வாரியாகவும், மற்றும் மாவட்டங்களில் வட்ட அலுவலங்களிலும் நடைபெறுவதாக கூறியுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏதேனும் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் பெயர் நீக்கம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த முகம் மூலம் மாற்றம் செய்து கொள்ளலாம்.

வரும் நாட்களில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் என தொடங்கி பலருக்கும் ஒரு ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளது. அச்சமயத்தில் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்யும்போது சிரமம் ஏற்படுவதை தவிர்க்க தற்போதே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் அட்டை மூலம் அத்தியாவசியம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது இது ரீதியாக புதிய அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பொது விநியோகத் திட்ட பயனாளிகளுக்கு வரும் சனிக்கிழமை குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குறைகளை தெரிவித்து சரி செய்து கொள்ளலாம்.

Previous articleநான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!
Next articleஅரசியலால் ஓரங்கட்டப்பட்ட முன்னனி நடிகர்கள்!! படம் ஓடாததற்கு இது தான் முக்கிய காரணம்!!