நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியதால் ஜனநாயகன் படம் தான் விஜய் சினிமாவில் நடிக்கப்போகும் கடைசி படம் என்கிற தகவலை விஜய் ஏற்கனவே வெளியிட்டார். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22.
பொதுவாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தின் ட்ரைலர், டீஸர் அல்லது பாடல் வெளியாகும். இந்நிலையில் ஜனநாயகன் தளபதியின் கடைசி படம் என்பதால் படத்தின் டீசரோ ட்ரைலரோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஜனநாயகன் படம் வெளியாவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் படத்தின் ட்ரைலர், டீசெர் அல்லது பாடலை இப்போதே வெளியிடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பையம், படத்தின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும் என படக்குழுவினரும், விஜய்யும் நினைத்துள்ளனர். இதனால் விஜய் பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என முதலில் முடிவெடுத்திருந்தனர்.
தளபதி பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிடாவிட்டால் அது ரசிகர்களை சோர்வடைய செய்யும் என்பதால் படம் தொடர்பான சிறு glimpseஒன்றை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.