தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கடைசியாக நடிக்கப்போகும்படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு பிறகு விஜய் இனி சினிமாவில் நடிக்கமாட்டார். முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவார். இதனால் ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
விஜய் ஜனநாயகன் படத்திற்காக சுமார் 250 முதல் 300 கோடி வரை சம்பளம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். பொதுவாகவே வினோத் படத்தில் மக்கள் நலன்சார்ந்த அரசியல் கருத்துக்கள் இடம்பெறும். விஜய்யின் கடைசி படம் என்பதாலும், இந்த படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு செல்வதால் படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும் என சொல்லப்படுகிறது.
ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் 72 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தளபதி விஜய் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் 80 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியையே விஜய் மிஞ்சிவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.