மற்ற நாடுகளை விட நம்முடைய இந்திய சினிமாவில் வெளியாகும் படங்களில் குறைந்தது 5 பாடல்களாவது இருக்கும். அதுவும் ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு கோடிகளில் செலவழிப்பார். பாட்டுக்காக லட்சங்களை செலவு செய்வது இன்னைக்கு நேத்து ஆரம்பிச்ச விசயம் கிடையாது. ஆரம்பம் முதலே படத்தின் பாடல்களுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கோடிகளை கொட்டிக்குவித்துள்ளனர்.
1980களில் வெளியாகும் படங்களில் சில்க் சிமிதா நிச்சயம் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவார். சில்க் சிமிதாவை பார்ப்பதற்காகவே அவரின் கவர்ச்சியை காண்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுப்பார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கூட சில்க் சிமிதா கவர்ச்சி நடனம் இடம்பெறும். அந்த படங்களும் சில்க்கின் ஆசீர்வாதத்தால் வெற்றிநடை போடும்.
வைதேகி காத்திருந்தாள் என்ற ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தை ரசித்ததை விட இந்த படத்தில் இடம் பெரும் பாடல்களை பார்ப்பதற்காகவே வைதேகி காத்திருந்தாள் படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி குவிந்தனர்.
இயக்குனர் ஷங்கரின் படங்களை ஆரம்பம் முதல் எடுத்துக்கொண்டால் படத்தின் பாடல்களுக்கு நிறைய செலவு செய்திருப்பார். இப்பவும் கூட அதைத்தான் ஷங்கர் தன்னுடைய படங்களில் தொடர்கிறார். இவருடைய படத்தில் இருக்கும் கதையை விட பாடல்கள் தான் பிரமாண்டமாகவும், இசையும் தாறுமாறாக இருக்கும். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், பாய்ஸ் போன்ற படங்களில் பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.
அதனாலேயே படம் மாபெரும் வெற்றி பெற்றது. அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் கதாநாயகியாக படம் முழுக்க வலம்வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் ஹும் சொல்றியா மாமா ஹும் ஹும் சொல்றியா மாமா பாடலில் இடம்பெற்ற சமந்தாவின் கவர்ச்சி நடனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்தனர். இந்த புஷ்பா படத்தில் ராஷ்மிகா வாங்கிய சம்பளத்தை விட ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தாவின் சம்பளம் அதிகமாம்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் இயக்குனரும், நடன இயக்குனரும் என்னை தமன்னாவுடன் ஆடவைக்காமல் கடைசியில் ஒரு ஓரமாக நிற்க வச்சு ஏமாத்திட்டாங்க என்று ரஜினிகாந்தே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் புலம்பியது நம் எல்லோருக்கும் நியாபகம் இருக்கும். இதனால் தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கோடிகளை கொட்டிக் குவிக்கிறார்கள்.