மீண்டும் அமைச்சராக போகும் பொன்முடி.. அடக்கி வாசி இல்லையென்றால் அவ்வளவு தான்!! ஸ்டாலின் சரமாரி தாக்கு!!

0
107
Ponmudi is going to be a minister again. Stalin's barrage!!
Ponmudi is going to be a minister again. Stalin's barrage!!

DMK Ponmudi: ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இரண்டு முறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளார், அதிலும் சமீப காலமாக கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் யாராக இருந்தாலும் அவரை பதவியிலிருந்தே நீக்கம் செய்து விடுகிறார். குறிப்பாக அமைச்சர் பொன்முடி ஆரம்ப கட்டத்திலிருந்து பெண்களைப் பார்த்து ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் என கூறியதை அடுத்து தற்போது சைவ வைணவ இனத்தை ஒப்பிட்டு மாது விலை பெண்களுடன் தொடர்பு படுத்தி பேசினார்.

இதனால் எதிர்க்கட்சி என தொடங்கி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. இதனால் அவர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இவரைப் போலவே பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரையும் கட்சித் தொண்டரை தாக்கியது ரீதியாக அவரது பதிவையும் பறிபோனது. இதனையடுத்து பொன்முடி பலமுறை ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்தும் அதனை மறுத்து வந்தார்.

தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழகம் முழுவதும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பொதுக்குழு கூட்டத்தை நடத்தி மக்களிடம் ஆட்சி தொடங்கியதிலிருந்து செய்தவற்றை எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கமானது விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதன் முழு பொறுப்பையும் பொன்முடிக்கு வழங்கியுள்ளனர். இதனால் கூடிய விரைவிலேயே அவருக்கு பழைய பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் பல கண்டிஷன்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாம். அவரது மகனுக்கு சீட் கேட்டு வரக் கூடாது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நாவடக்கம் என்பது தேவை. அதனால் இனி பொதுமக்கள் மத்தியில் பார்த்து பேச வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleகொலையை நியாயப்படுத்துகிறாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சி தலைவர் சரமாரி கேள்வி!
Next article“விசிக வுக்கு ஆப்பு” திமுக-வுடன் பாமக கூட்டணி.. விளக்கமளிக்கும் ராமதாஸ்!!