DMK: திருபுவனத்தில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணமானது தற்போது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விசாரணையின் போது 10 சவரன் நகை திருட்டுப் போனதால் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்ததாக கூறினர். தற்போது ரூ 500 ரூபாய் தகராறுக்காக அஜித்குமார் மீது பொய் புகார் சூட்டி அடித்து துன்புறுத்தி கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் இந்த அராஜகத்தை மாற்ற கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்னிறுத்தி உள்ளனர்.
இப்படி இந்த விவகாரமே ஆராத நிலையில், இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடியில் திருவிழா நடைபெறுவதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வந்துள்ளனர். அதில் சிஐடி லிங்கசாமி என்பவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்த தங்கவேலுவிடம் தகராரில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கிருந்த ராட் கம்பியை கொண்டு தங்கவேலுவை மாற்றித்திறனாளி என்று கூட பாராமல் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் அவரது இடது கை உடைந்துள்ளது. மேற்கொண்டு இது ரீதியாக அக்கம் பக்கத்தினர் கேட்ட பொழுது அவர்களையும் கடுமையாக மிரட்டியுள்ளார். இவர் அந்த மாற்றுத்திறனாளியை தாக்கிய சிசிடி வீடியோவையும் போலீசார் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். தற்போது தாக்குதல் நடத்திய போலீசார் லிங்கசாமி மீது புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். இது ரீதியாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.