மேற்கொண்டு அவரை கோவில் பின்புறம் அழைத்து வந்து சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால் அந்தரங்க உறுப்பு என பல இடங்களில் மிளகாய் பொடி தூவி உள்ளதாகவும் கூறுகின்றனர். அதிலும் அஜித்குமார் மீது புகார் தந்த நிகிதா என்ற பெண் தற்போது தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க இதே போல் அதிமுக ஆட்சி காலத்தில் கடைசி ஆண்டில் சாத்தான்குளத்தில் அப்பா மகன் லாக்கப் மரணம் நடைபெற்றது.
இதே போல தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எடப்பாடிக்கு எதிராக குரல் ஓங்கினர். அதிலும் சினிமா துறையிலிருந்து சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ் இன்னும் பல நடிகைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக ஆட்சியில் தற்போதும் அதே போல் ஒரு சம்பவம் நடந்திருக்கும் நிலையில் சூர்யா வாய் திறக்கவில்லை. அவர் நடித்த ஜெய் பீம் இதே போல கதையை தழுவி தான் இருக்கும். தற்போது இந்த நடிகர்கலெல்லாம் வாய் திறக்காததால் சினிமா துறை முழுவதும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளதா இவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று கேள்வியை பலரும் முன் வைத்து வருகிறார்கள்.
நடுநிலைவாதிகளாக இருந்திருந்தால் தற்போதும் ஆதரவு தெரிவித்திருப்பார்கள். ஆனால் இவர்களின் இரட்டை வேடமானது இந்த அசம்பாவிதத்தின் மூலம் அம்பலமானதுடன் யாருக்கு எங்களது சப்போர்ட் என்பதையும் இதன் மூலமே வெளி கான்பித்துள்ளனர்.