TVK DMK: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணத்தை அடுத்து தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக மாற்றுக் கட்சியினர் அனைவரும் கண்டகம் தெரிவித்து வருகின்றனர். முதல்வரான ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் அவரது தாயிடம் செல்போனில் பேசி ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து இரண்டு லட்சம் பணத்தையும் வழங்கினார். மேற்கொண்டு இதற்கு நீதி வாங்கி தர வேண்டும் எனக் கூறி சென்னையில் போராட்டம் நடத்துவதாக கட்சி ரீதியான அறிவிப்பு வெளியானது. அதேசமயம் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மறுபக்கம் இந்த போராட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்டி ஸ்டாலினுக்கு எதிராக பெரிய களத்தை உருவாக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார்.
ஒவ்வொரு முறை விஜய் போராட்ட களத்தில் இறங்கும் பொழுதும் அதற்கு போலீசார் அனுமதி தருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி தான் என கூறுகின்றனர். தொடர் அனுமதி கேட்டு வந்ததால் வரும் ஞாயிற்றுக்கிழமை எழும்பூரில் அஜித் குமார் லாக்கப் மரணம் குறித்து நீதி வழங்க கோரி போராட்டமானது நடைபெறும் எனக் கூறியுள்ளனர். இந்தப் போராட்டமானது மேற்கொண்டு ஸ்டாலினுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு கட்சியை பின்னோக்கி அழைத்து செல்லும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவையனைத்தும் திமுக விற்கு பாதகத்தை தான் ஏற்படுத்தும்.