இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 74 வயதாகி இருந்தாலும் இன்னமும் ரொம்ப சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் ரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். த்ரிஷியம் படத்தின் ரீமேக் தான் பாபநாசம். இந்த பாபநாசம் படத்தில் கமலஹாசன் நடித்திருப்பார்.
திரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற இந்திய மொழிகளிலும், உலக அளவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது. தமிழில் முதலில் ரஜினிகாந்தை வைத்து தான் பாபநாசம் படத்தை எடுக்க விரும்பி இருக்கிறார் இயக்குனர் ஜித்து ஜோசப். பாபநாசம் படத்தில் ஹீரோ போலீசிடம் அடிவாங்குவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த மாதிரியான காட்சிகளை வைத்தால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்துள்ளார் இயக்குனர்.
பின்னர் பாபநாசம் படத்தில் கமலஹாசனை கமிட் செய்து படத்தை எடுத்துள்ளனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் இந்த விஷயத்தை ரஜினிகாந்திடம் சொல்லியபோது இதுல என்ன இருக்கு, படம் சூப்பர் வாழ்த்துக்கள் என்று இயக்குனரை வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.