உங்கள் இடுப்பு சிம்ரன் போல அழகாக மாற எளிமையான டிப்ஸ்:
பலருக்கும் திருமணத்திற்கும் முன் இருந்த உடல் வாக்காது குழந்தை பிறந்த பிறகு இருக்காது. மிகவும் குண்டாகவும் அல்லது இடுப்பு பகுதியில் மட்டும் தசை போட்டு காணப்படும். இதனாலையே பலரும் மன அழுத்தத்திற்கு உண்டாவது உண்டு. ஆனால் இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். முதலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்குமானவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால்தான் இடுப்பு பகுதியில் தேவையற்ற மடிப்புகள் உண்டாகிறது. கொலஸ்ட்ரால் அற்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் அதிக அளவு சதை போடுவதை தவிர்க்க முடியும்.
வாழைத்தண்டு:
வாழைத்தண்டில் அதிக அளவு நீர்ச்சத்துள்ளது. இதனை ஜூஸ் ஆக அல்லது பொறியலாக தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை சாப்பிடுவதால் தேவையற்ற தசை சேர்வதை தடுக்கும்.
சீரக தண்ணீர்:
மூன்று லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து கொடுத்து வர அஜீரணம் கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் வயிறு உப்பசம் உண்டாகாது.
இடுப்பை சுற்றியுள்ள கருமை நீங்க:
கடுகு எண்ணெயை அடுப்பில் வைத்து லேசாக சூடு படுத்திக் கள்ள வேண்டும். அதை இடுப்பைச் சுற்றி தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்பு கடலை மாவால் தேய்த்துக் கழுவி கொள்ளவும். இவ்வாறு செய்து வர இடுப்பை சுற்றியுள்ள கருமை நீங்கிவிடும்.
அதேபோல பிரசவத்திற்கு பிறகு பலருக்கும் வயிறு சுருக்கம் ஏற்படும். அதனை சரிசெய்ய கடுகு எண்ணெயுடன் சிறிதளவு கோதுமை தவிடை கலந்து வயிற்றில் பூசி விட வேண்டும். இதனை அப்படியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வயிறு சுருக்கம் குறைவதை பார்க்க முடியும்.