TVK: தாவெக வின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது விலகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சிக்கு சென்ஸ் அனலிடிக்ஸ் என்ற நிறுவனத்தின் வழியாக பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக இருந்து வந்தார். இவருக்கு முன்னதாகவே ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் உள்ளிட்ட தங்கள் தரப்பு ஆலோசனையை கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனாவின் தலையீடு தான் அதிகமாக இருந்துள்ளது.
அவர் கை காட்டும் நிர்வாகிகளை பணியமர்த்துவது, அவர் சொல்லுக்கு உடனடி நடவடிக்கை என தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதனால் பிரஷாந்த் கிஷோர் பேச்சு எடுபடவில்லை. இதை ஓரளவுக்கு மேல் பிரசாந்த் கிஷோரால் பொறுக்க முடியாமல் தேர்தல் ஆலோசகரிலிருந்து விலகிக் கொண்டார். இதற்கு முக்கிய காரணமாக அவர் கூறுவது தற்போது பீகாரில் தேர்தல் நடைபெறப்போவது தான். அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த உள்ளார்.
அங்கு அரசியல் ஆலோசகராக செயல்படுவதால் தற்போது தவெக கட்சியில் பங்காற்ற முடியவில்லை. இவர் இல்லாத இந்த இடத்தில் வேறு யார் நிரப்புவார்?? மேலும் கட்சியின் வளர்ச்சி சார்ந்த பணிகள் எப்படி இருக்கும்?? மீண்டும் பிரசாந்த் கிஷோர் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் பல கேள்விகளை நிர்வாகிகள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் விஜய் இது ரீதியாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.
பீகாரில் பிகே களம் காண இருப்பதால் தேர்தல் முடிந்து டிசம்பர் மாதம் கழித்து மீண்டும் தவெக வில் அரசியல் ஆலோசகராக செயல்படுவதாக தகவல்கள் வெளியிகியுள்ளது. அச்சமயத்தில் ஆதவ் அர்ஜுனாவின் நிலைப்பாடு இருக்க கூடாது என்ற கண்டிஷனும் போட வாய்ப்புள்ளதாம்.