ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி வைத்தாலும் சமீப நாட்களாக இரு கட்சியினடையே உரசல் போக்கு இருந்து வருகிறது. இவர்கள் கூட்டணி அமைத்தும் சரியான பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுக தங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இதுவே பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறுகிறது.
சமீபத்தில் சென்னைக்கு வருகை புரிந்த அமித்ஷாவும் அதேதான் கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த காரணத்தினால் அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற ரகசிய ஆலோசனையை செய்து வருகின்றனர். முன்னதாக பாஜகவே வேண்டாம் என எடப்பாடி திட்டவட்டமாக இருந்த நிலையில், பல விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.
அப்படி இருக்கையில் கூட்டணி ஆட்சி என்பது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. இதனால் கொள்கை மற்றும் மதவாத எதிரியாக திமுக பாஜகவை எதிர்க்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் மீண்டும் கை கோர்க்க எடப்பாடி யோசனை செய்து வருகிறாராம். முன்னதாகவே விஜய்யுடன் தான் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் வைத்த டிமாண்டானது எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை.
தற்போது பாஜக கொடுக்கும் இடைஞ்சலை தவிர்க்க மீண்டும் விஜய்யுடன் பேசி பார்க்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் கட்டாயம் இரட்டை முதல்வர் தமிழகத்தை ஆள வாய்ப்புகள் அமையும்.