அமீர் கான் நடிப்பில் R.S. பிரசன்னா இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் சித்தாரே ஜமீன் பர். ஏற்கனவே அமீர் கான் நடிப்பில் உருவான தாரே ஜமீன் பர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படமும் வித்யாசமான ஜானரில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை தானே தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார் அமீர் கான். முதலில் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் தமிழ் மற்றும் ஹிந்தியில் சிவகார்த்திகேயன் மற்றும் பர்ஹான் அக்தரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கலாம் என்று அவர்களிடம் பேசியுள்ளார்.
படத்தின் கதை இருவருக்கும் பிடித்துப்போனதால் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் படத்தின் கதை அமீர் கானுக்கு ரொம்பவே பிடித்துப்போகவே, நானே இந்த படத்தில் நடிக்கவா என்று இயக்குனர் பிரசன்னாவிடம் கேட்டிருக்கிறார். பிரசன்னாவும் ஓகே சொல்லியிருக்கிறார்.
பின்னர் சிவகார்த்திகேயன் மற்றும் பர்கான் அக்தரிடம் நானே இந்த படத்தில் நடிக்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று அமீர் கான் சொல்லி இருக்கிறார். இந்த முடிவு அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தாலும் என்னுடைய நிலைமையை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர் என்று அமீர் கான் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அமீர் கான் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.