தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவான படம் வாரிசு.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது வாரிசு படம் வெளியானது. இந்த படம் வெளியான நேரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் திரைத்துறையை சேர்ந்தவர்கள் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்றும், தயாரிப்பாளர் விஜய்யின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் பேசினர்.
இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் பற்றியும், வாரிசு படம் பற்றியும் மனம் திறந்துள்ளார். விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். மொத்தம் 6 மாதம் கால் சீட் கொடுத்தால் குறித்த நேரத்தில் படத்தில் நடித்து கொடுத்து விடுவார்.
ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் முழுமையாக நடித்துக் கொடுப்பார். இதை விட மிகப்பெரிய சந்தோசத்தை தயாரிப்பாளருக்கு யாரால் கொடுக்க முடியும். விஜய் மாதிரியே எல்லா நடிகர்களும் இருந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. வாரிசு படம் வெற்றிப்படமே, வாரிசு படத்தால் எங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்று தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி கொடுத்துள்ளார்.