PMK: பாமக கட்சிக்கும் தலைமை பதவிக்கான மோதல் போக்கானது தற்போது வரை தீர்ந்தபாடில்லை. அப்பா மகன் இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டு, நான் தான் தலைவர் எனக் கூறி வருகின்றனர். ஆனால் பாமக கட்சியின் உண்மையான தலைவர் யார் என்று தெரியவில்லை. இந்த கட்சியை ஆரம்ப கட்டத்திலிருந்து தலை தூக்க பாடுபட்டவர் ராமதாஸ் தான். அதனால் அவர் தான் தலைவர் என்று பலரும் வழி மொழிகின்றனர். அவர் பார்த்து அமர்த்தியவர்தான் அன்புமணி, எப்படி இப்போது வந்தவர் தலைவராகிட முடியும் என்றும் கேட்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் கட்சி இரண்டாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. அதிலும் அன்புமணி கூறுவதாக, எனது அப்பாவுக்கு சில பேர் தங்களின் சுயநலத்துக்காக சொல்லிக் கொடுக்கின்றனர். அதேபோல திமுக தற்போது இவர் மீது கரிசனம் காட்டுகிறது. அவர் குழந்தை போன்றவர் என விமர்சனம் செய்திருந்தார். மேற்கொண்ட ஜிகே மணி தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ற பேச்சும் கட்சிக்குள் இருந்து வருகிறது. ஆனால் அவரோ, இருவரும் ஒன்று சேர வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
சமீபத்தில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைப்பது ரீதியாக மும்முரம் காட்டி வருகிறார். இதற்கு காரணம் ஜிகே மணி தான் என கூறுகின்றனர். நாம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது பாஜகவுடன் கூட்டு வைத்து தான் தங்களுக்குறித்த பெயர் இல்லை. அதனால் மீண்டும் திமுக உடன் இணையலாம் என கூறுகிறாராம். மேற்கொண்டு திமுக முக்கிய அமைச்சர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறதாம். மற்றொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அன்புமணி விரும்புவதாக கூறப்படுகிறது.