யாதும் அறியான் படத்தில் ரகசிய வேலை பார்த்த விஜய்.. 2026 யில் CM இவர் தான்!!

0
85
Vijay who did secret work in Yadum ariayan.. He is the CM in 2026!!
Vijay who did secret work in Yadum ariayan.. He is the CM in 2026!!

TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்து தனது கொள்கை எதிரி மதவாத எதிரி யார் என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போது நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் கூட ஒருபோதும் நாங்கள் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இவர் சினிமாவை விட்டு முழுமூச்சாக அரசியலில் இறங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிலும் இவரது கடைசி படமாக ஜனநாயகன் உள்ளது. இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியுள்ளார். ஆனால் இவரைப் போல் வேறு எந்த கட்சியினரும் கூட்டணிக்காக இந்த சலுக்கையை கொடுத்ததில்லை. இவரின் வருகையை பாராட்டி சினிமா பிரபலங்கள் பலரும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுத்துதான் வருகின்றனர்.

அந்த வகையில் செந்தூரா படத்தை எடுத்த இயக்குனர் தற்போது யாதும் அறியான் என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் 2024 மற்றும் 2026 யில் எடுக்கப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சி தான் தற்போது வைரலாகி உள்ளது. அதாவது 2026 யில் CM ஆக விஜய் இருப்பதாகவும், அதில் யாருக்கும் இனி இலவசம் என்பது கிடையாது எனக்கூறிய போஸ்டர் இடம்பெற்றுள்ளது. மேற்கொண்டு விவசாயிகளை முன்னிறுத்தி பல திட்டங்களை வைத்திருப்பது போலவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காட்சியானது படத்தின் ட்ரைலரில் வைத்துள்ளதால் பெருமளவு வைரலாகி வருகிறது. விஜய் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரியவைக்கவே இந்த போஸ்டர் என அவரது ஆதரவாளர்கள் கூறுவதோடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யின் மறைமுக உதவி இந்த படத்திற்கு இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

Previous articleதிமுக பக்கம் தாவும் ஜி கே மணி.. முக்கிய புள்ளியுடன் ரகசிய பேச்சு வார்த்தை!! கூட்டணிக்கு ரெடியான அன்புமணி!!
Next articleஅரசின் புதிய திட்டம்: வீடு வாங்க விருப்பமா? இப்போதே விண்ணப்பியுங்கள்!!