கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் எப்படி வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேலே கொண்டு வருவார்களோ அதேபோல அரசியலிலும் வாரிசுகள் முன்னுரிமை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். திமுக ஸ்டாலின் உதயநிதி, பாமக ராமதாஸ் அன்புமணி, ஓபிஎஸ் அவருடைய மகன் ஓபி ரவீந்திரநாத் வரிசையில் வைகோவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
வைகோ மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்தபிறகு அவரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தலைவர்களை மதிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பதவி கொடுப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். வைகோவுடன் ஆரம்பம் முதலே பயணித்தவர் மல்லை சத்யா. இவர் தற்போது மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வருகிறார்.
தற்போது தனக்கு துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்றப்பார்க்கிறார் வைகோ என்னும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மல்லை சத்யா. குடும்ப அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்த வைகோ இப்போது துரைவைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். துரோகி பட்டம் கொடுத்து என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.
வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என்று சொல்லும் அளவுக்கு வைகோ துணிந்து விட்டார். வாரிசு அரசியலுக்காகத்தான் என்னுடைய மகனுக்காகத்தான் இதை எல்லாம் செய்தேன் என்று வைகோ என்னை கட்சியை விட்டு துரத்தப்பார்ப்பது மனக்கவலை அளிப்பதாக பேட்டி கொடுத்துள்ளார் மல்லை சத்யா.