மகளிருக்கு ரூ 1500 உரிமைத்தொகை.. ஸ்டாலின் குட்டை உடைத்த எடப்பாடி!!

0
65

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கியது. அதிலும் பல வரைமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனால் பலருக்கும் உரிமை தொகை கிடைக்காமல் போனது.

நாளடைவில் இந்த திட்டத்தில் விரிவாக்கத்தை ஏற்படுத்தி சில தளர்வுகளை உண்டாக்கினர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு சலுகைகளை இத்திட்டத்தின் வழியாக கொடுத்துள்ளது. யாரெல்லாம் புதிய ரேஷன் அட்டையை விண்ணப்பிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இனி உரிமை தொகை கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து பல அழுத்தங்களுக்கு பிறகு தான் மகளிர் உரிமைத் தொகையை நடைமுறைப்படுத்தியது. தற்போது வரை 75 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் எண்ணாது?? இந்த ஆட்சியில் விவசாயிகள் பற்றி எந்த கவனமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் மகளிருக்கு 1500 கொடுத்திருப்போம் என கூறினார். வரப்போகும் தேர்தலில் கட்டாயம் மகளிர் குறித்து உரிமைத் தொகை அதிகமாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Previous articleவிசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி
Next articleதிமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?