வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லாத திமுக.. ஒரேயடியாக ஆப்படிக்கும் அரசு ஊழியர்கள்!! பிரஷரில் ஸ்டாலின்!!

0
84
DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!
DMK is unable to fulfill the promise.. Government employees are demanding at once!! Stalin under pressure!!

DMK: திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மேலும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் என்று ஏழு அம்ச கோரிக்கைகளை கூறியிருந்தது. ஆனால் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து நேற்று சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். தங்களுக்குரிய எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றாததால் கொந்தளிப்பில் இருந்தனர்.

இதே போல தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் இது ரீதியாக உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தலைமை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது மனக் குமுறல்களை தெரிவித்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு எதற்கு இன்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தப் போராட்டத்தில் கட்டாயம் திமுக 2026 யில் ஏமாற்றத்தை அடையும் என்றும் கூறியிருந்தனர். இதனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு எதிராகவே கொடி பிடிக்க போகின்றனர். கடந்த முறையை இவர்களின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள தற்சமய சமாதான அறிக்கைகளை வெளியிட்டு ஆட்சியை கைப்பற்றி விட்டது.

அதை வைத்து இத்தனை காலமும் கடந்துவிட்டனர். ஆனால் இம்முறை அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளதால் திமுக வுக்கு எதிராக தான் அவர்களது வாக்குகள் இருக்கும்.

Previous articleஅன்புமணியிடம் சமாதன தூது சென்ற தாய்.. சந்தோஷப்பட்ட ராமதாஸ்!! ஒன்றினையும் பாமக!!
Next articleஅஜித்குமார் லாக்கப் மரணம்.. வெளியான மற்றொரு வீடியோ!! வசமாக சிக்கிய திமுக!!