TVK: தமிழகத்தில் பிரதானமாக திமுக அதிமுக என்ற ஆட்சி மாறி மாறி நடந்து வரும் நிலையில் இதன் ஓட்டு விகிதத்தை உடைப்பதற்காகவே தற்போது தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்குள் நுழைந்துள்ளது. அதிலும், அரசியல் எதிரியாக திமுக மற்றும் பாஜகவை முன்னிறுத்தி உள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் தனது முதல் மாநாட்டை யாரும் எதிர்பாராத வகையில் நடத்த முடித்த விஜய் தற்போது வெளியே சொல்லாமல் இரண்டாவது மாநாட்டிற்கு அடிக்கல் நாட்டி விட்டார்.
இது ரீதியாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதனை சொல்வதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பும் மற்றும் வெற்றி நிச்சயம் எனக் கூறியுள்ளார். அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்ற பெரிய தலைவர்கள் அனைவரும் சங்கம் வளர்த்த மதுரையை தான் மாநாட்டிற்கு தேர்வு செய்வர். அதேபோல விஜய்யும் முதல் மாநாட்டை இங்கே தான் நடத்த வேண்டும் என்று முடிவிலிருந்தார்.
ஆனால் அதனை ஆளும் கட்சி விடவில்லை. தொடர்ந்து அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தங்களுடைய பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை இங்கே தான் நடத்தியும் வருகிறது. அந்த வகையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக விஜய்யும் இவர்களுடன் போட்டி போட ஆரம்பித்துள்ளார். அதன் முதல் படியாக மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாநாட்டை போல் இம்மாநாட்டில் தனது தொண்டர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதுடன் போன மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கட்டாயம் இம்முறை சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறுகின்றனர். மேலும் திமுக ஒழிய வேண்டும் என்பதில் அதிமுக விஜய் யின், தவெக உள்ளிட்ட கட்சிகள் திட்டவட்டமாக இருக்கின்றனர்.