ADMK BJP: தமிழக அரசியல் களமானது நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்தவகையில் ஆளும் கட்சி முதல் எதிர் கட்சி வரை அனைவரது கூட்டணியும் ஒரு வித குழப்பத்திலேயே உள்ளது. முதலில் ஆளும் கட்சி தங்களது கூட்டணி பலமாக உள்ளது என கூறி வருகின்றனர். ஆனால் தற்போது காங்கிரசுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது.மேலும் பாஜவுடன் கூட்டணியிலிருக்கும் அதிமுக-வும் சரியான தெளிவான முடிவில் இல்லை.
பாஜக வின் அமித்ஷா உள்ளிட்டோர் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர். அவரைப் போலவே சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையும், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை கூறி விட்டார். இனிநான் என்ன கூறுவது, அவர் சொன்னதை என்னால் மாற்றி கூற முடியாது. அதிமுக வேண்டுமானால் அவரிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும். இரு தலைவர்களும் தான் பேசி முடிவு பன்ன வேண்டும்.
அதாவது ஆட்சிக்கு முன் மற்றும் பின் எப்படி நடந்து கொள்ள வேண்டுமெல்லாம் என்ற கருத்தை அண்ணாமலை வைத்தார். இவ்வாறு அவர் கூறியது, அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தியதுடன் இந்த கூட்டணி ஒத்துவராது என்ற முடிவையும் எடுக்க வைத்துள்ளது. இதனால் கூடிய விரைவிலேயே அதிமுக பாஜக கூட்டணியை கை கழுவி விடும்.
அண்ணாமளையால் தான் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு வர போகிறது. இதனால் அண்ணாமலைக்கு பழைய தலைவர் பதவியும் கிடைக்குமாம். நயினார் ஓர் பொது நிகழ்ச்சியில் தனக்கு கட்சிக்குள் மரியாதையே இல்லை என்பதை கூறியிருந்தார். இவையனைத்தும் அண்ணாமலை இல்லை என்ற வெறுப்பின் உச்சக்கட்டம் தான். இதனை சரிசெய்யும் வகையில் அவரையே மீண்டும் தலைவராக நியமிக்கலாம்.