ADMK DMK: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் தான் அன்வர் ராஜா. எம்ஜிஆர் இறந்த காலத்திலிருந்து கட்சியை விட்டு வெளியேறும் வரை அதிமுகவிற்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளார். பல்வேறு சூழ்நிலைகளிலும் கட்சிக்கு பக்கபலகமாக இருந்துள்ளார். இவர் பாஜகவின் மத வேறுபாடு காரணமாக அதன் கூட்டணியை முழுமையாக எதிர்த்தார். இதனால் 2021 ஆம் ஆண்டு இவரை அதிமுகவில் இருந்தும் நீக்கினர். மேலும் எடப்பாடி தவிர்த்து சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல 2023 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக பாஜக இணைந்துள்ள நிலையில் மீண்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியை விட்டு விலகிவிட்டார். பாஜகவின் மதப் பிரிவினை மையப்படுத்தி பல இஸ்லாமியர்கள் எதிர்ப்புதான் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அன்வர் ராஜா அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவுடன் இணைந்து கொண்டார்.
இவ்வாறு அவர் எதிர்க்கட்சியை நோக்கி பச்சை கொடி அசைத்து உள்ளது எடப்பாடிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இவருக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைப்பதில் சற்று சந்தேகம் தான். இதனை சரி செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொடுத்த குல்லாவை வாங்கி அணிந்து கொண்டார். ஆனால் இப்படி ஒப்பேத்தி கொடுப்பதால் எதுவும் மாறப் போவதில்லை.
முன்னதாகவே பாஜக, கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதை கட்சி நிர்வாகிகள் முழுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அன்வர் ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேறுவது அதிமுகவை அதுல பாதாளத்திற்கு கொண்டு செல்லும்.