BJP: தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்க தொடங்கியது. அண்ணாமலை தவிர்த்து வேறு யாரையும் அந்த பதவிக்கு அமர்க்கக்கூடாது என்பதில் குறிக்கோளாக அவர்கள் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணியால் இவரை மாற்றும் சூழல் உண்டானது.
அதன் பிறகு நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்தும் அவருக்கு சரியான மரியாதையை கட்சி நிர்வாகிகள் கொடுக்கவில்லை. இது ரீதியாக அவரே பொது மேடையில் கூறியுள்ளார். இவையனைத்தையும் மனதில் வைத்துக் கொண்ட நயினார் நாகேந்திரன் தக்க சமயம் வரும் வரை காத்திருந்துள்ளார். இந்த வகையில் தமிழக பாஜகவின் கட்சி நிர்வாகிகள் இரண்டாவது பட்டியலானது நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
அதில், அண்ணாமலைக்கு எதிரான பலர்தான் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை பதவியிலிருந்த போது பாலியல் புகாரில் சிக்கி கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்ட கே டி ராகவனுக்கு பதவி கொடுத்துள்ளனர். அதேபோல குஷ்பூவுக்கு மாநில துணைத்தலைவர் பதவி சூர்யாவுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்ணாமலையின் எதிரியாக கட்சிக்குள் பார்க்கப்பட்ட வினோத் பி செல்வம் மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்வார் என்று கூறியுள்ளனர்.
இந்த நிர்வாகிகள் பணியமர்த்தம் குறித்த பட்டியலுக்கு ஜேபி நாட்டார் ஒப்புதல் அளித்துள்ளார். தற்பொழுது தமிழக பாஜக மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளில் அண்ணாமலைக்கு எதிரான நிர்வாகிகள் அமர்த்தப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அவருக்கு எதிராக செயல்படுத்தவே நயினார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.