
BJP: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் கட்சி சார்ந்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு, தமிழகத்தை மீட்போம், என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தனித்து தனித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக இரண்டாவது முறையாக புதிய நிர்வாகிகள் குறித்த பட்டியலை வெளியிட்டது.
அத்தோடு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் பார்த்து வருகிறது. இந்த முறை இரண்டாவது புதிய நிர்வாகிகள் பட்டியலில் அண்ணாமலைக்கு எதிரானவர்கள் தான் தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மாதந்தோறும் பாஜக சார்பாக மாநாடு நடத்தவும் ஆலோசனை செய்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் தான் முதல் மாநாடு நடைபெற்றது. இவை அனைத்தும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமித்ஷா காட்டிய வழியில் செயல்படுத்த உள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக எந்த தொகுதியில் யார் யார் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பட்டியலையும் நையினார் நாகேந்திரன் தயார் செய்ய உள்ளார். இதில் அண்ணாமலை பெயர் விடுபட்டுள்ளதாம். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு பொறுப்பு கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி உள்ளாராம்.அதற்கு பதிலாக டெல்லி மத்தியில் பெரிய பொறுப்பு தயாராகுவதாகவும் இதற்கு உறுதுணையாக பிஎல் சந்தோஷ் உள்ளதாக கூறுகின்றனர்.
இதனால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.