
திமுக-விற்கு எதிரான வழக்கு:
அதிமுகவின் மாஜி அமைச்சர் சி சண்முகம், பொது மக்களின் பயனுக்காக கொண்டு வரப்படும் அரசு திட்டங்களுக்கு தங்களது பெயரை சூட்டி விளம்பரப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர் மூலம் திட்டம் தொடங்கி வைத்ததையும் கண்டித்து அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது, அதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இரு தரப்பு வாதத்தையும் கேட்டனர்.
சிவி சண்முகம் வாதம்:
அதில் சிவி சண்முகம் கூறியதாவது, அரசு விளம்பரங்களில் ஒருபோதும் அவர்களுடைய புகைப்படங்கள் கட்சி சார்ந்த நிர்வாகங்களின் புகைப்படங்கள் இருக்க கூடாது என்பது முதன்மையான விதி. அதேபோல அரசு பணத்தில் செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் தங்களது சுய படத்தை பயன்படுதவும் கூடாது. இதற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அதில், உச்சநீதிமன்றம் அரசு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தங்களது புகைப்படங்களை பயன்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.மேற்கொண்டு உரிய விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவு:
இருவரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இனிவரும் நாட்களில் அரசு சார்ந்த திட்டங்களுக்கு கட்டாயம் தங்களது புகைப்படம் பெயரை பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி முறையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேற்கொண்டு இது ரீதியாக தங்களது பெயரை வைத்ததற்கு திமுக மற்றும் தமிழக அரசு தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைவரும் பதில் கூற வேண்டும்.
அதேபோல அரசு திட்டங்களுக்கு பெயர் வைக்க கூடாது என்பதை கூறியுள்ளதால் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவத் திட்டத்திற்கு இந்த வழக்கு தடையாகவும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இனிவரும் நாட்களில் அரசு சார்ந்த செயல்பாட்டிற்கு வரும் எந்த ஒரு திட்டத்தில் அவர்களின் சுய பெயரோ புகைப்படமோ இருக்காது.