
EPS OPS: அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் இருந்தனர். உட்கட்சி மோதல் காரணமாக கட்சியை விட்டு நீக்கிய பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் எந்த ஒரு அடிப்படை பதவியியும் கிடையாது எனக் கூறியிருந்தனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்று முக்கிய 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
அதில் அனைவரின் ஒருமித்த கருத்துடன் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் அதிமுக சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் தனிநபர் சூரியமூர்த்தி என்பவரும் வழக்கு தொடுத்திருந்தார். இதனிடையே இந்த வழக்குகலை ரத்து செய்யும் படி எடப்பாடி மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகளும் நீதிமன்ற அமர்வுக்கு வந்தது.
இது ரீதியாக நீதிபதிகள் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு செய்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இதனால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது செல்லுபடி ஆகாது. அதே சமயம் ஒருமித்த கருத்துடன் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தையும் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது வழக்கானது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பி உள்ளதால், அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எடப்பாடிக்கு சாதகமாக எந்த ஒரு தீர்ப்பும் இல்லாத நிலையில், பன்னீர் செல்வத்திற்கும் கட்சியில் உரிமை உள்ளது என கூறிவிட்டால் அதிமுக தலைமை இரண்டாக பிரியுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.