PMK: பாமக கட்சிக்கு அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் நிலவி வரும் பட்சத்தில் ராமதாஸ் தொடர்ந்து அன்புமணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனிடையே கட்சியின் அதிகாரத்தன்மையானது இரண்டாக பிரிந்து செயல்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ராமதாஸ் தங்கியிருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ரகசிய ஒட்டு கேட்டுக்கும் கருவி இருந்ததாகவும், இது வெளிநாட்டிலிருந்து வரவைத்து பொருத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
இது ரீதியாக தனியார் துப்பறிவு நிறுவனத்திடம் ஆய்வு செய்ய சொல்லி கேட்டுக்கொண்டனர். அதன்படி அவர்கள் ஆய்வு செய்தது வீட்டில் உள்ள வைஃபை, சிசிடிவி உள்ளிட்ட அனைத்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கட்சியின் நிறுவனர் வீட்டிலேயே இப்படி இணையதள செயல்பாட்டை சட்டவிரோதமாக ஹேக் செய்துள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சமயத்தில் இது ரீதியாக விழுப்புரம் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டது, மேற்கொண்டு இது ரீதியாக விசாரணை செய்தும் வருகின்றனர். தற்போது WiFi பயன்படுத்தி ராமதாஸ் அவர்களின் செல்போனையே ஹாக் செய்து உள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும் ஒட்டு கேட்கும் கருவியில் லைக்கா நிறுவனத்தின் சிம் கார்ட் இருந்ததாக புகாரில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மகனே தந்தையின் அடுத்த அரசியல் நகர்வை கண்டுபிடிக்க இப்படிப்பட்ட செயல்களில் இறங்கி உள்ளாரா என்று கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.