OPS TTV: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை தனித்து விடு ஆரம்பித்துவிட்டனர். அதன் உச்சகட்டமாக தமிழகம் வருகை புரிந்திருந்த பிரதமர் மற்றும் அமித்ஷா-வை சந்திக்க கூட விடவில்லை. இதனால் வேதனை அடைந்தால் பன்னீர்செல்வம், இனி இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தார். மேற்கொண்டு கட்சியை விட்டு விலகி தனித்து செயல்பட போவதாக கூறினார்.
இவர் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து விடுவாரா?? என்ற கேள்வி அனைத்து பக்கமும் இருந்தது. ஆனால் கட்டாயம் திமுக வில் இணைய மாட்டேன் என்று கரராக கூறிவிட்டார். மேற்கொண்டு இவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான், அந்தவகையில் வரும் நாட்களில் இது ரீதியாக ஆலோசனை செய்து பலம் வாய்ந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பதாக இவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே நயினார் நாகேந்திரன், ஒபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால் மோடியை பார்க்க கட்டாயம் நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று கூறினார். இவருக்கு எதிராக பன்னீர் செல்வமும் தனக்கு யாரும் நேரம் ஒதுக்கவில்லை என்று தனது தரப்பை முன் வைத்தார். தற்போது தென் மாவட்ட வாக்குகள் அனைத்தும் சிதறக்கூடும் என்பதால் பன்னீர் செல்வத்தை மீண்டும் தேச ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல் டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் வந்து இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இவரே தற்போது பாஜக கூட்டணியில் தான் உள்ளாரா?? என்பது தெரியவில்லை என தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். இது ரீதியாக அவர் பேசுகையில் தற்போது வரை பாஜக அதிகாரப்பூர்வமாக எந்த இடத்திலும் அமமுக தங்களது கூட்டணியில் உள்ளதாக தெரிவிக்கவில்லை.
அதேபோல மற்றொரு பக்கம் நையினார் நாகேந்திரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் பனிப்போர் இருந்து வருகிறது. சமீபத்தில் பனி போருக்கான சாயலை பேட்டிகளில் பார்க்க முடிந்தது. அந்த வகையில் பெரும் வாரியாக பாஜகவில் கலந்து கொள்ளாத டி டிவி எப்படி கூட்டணியில் இருக்க முடியும்?? பன்னீர்செல்வத்தை போல இவரும் நாளடைவில் கட்சியை விட்டு வெளியேர அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.