OPS TVK: அதிமுக பாஜக கூட்டணியால் ஓபிஎஸ்-ஐ நெருங்கு விடாமல் செய்ததால் அவர் NDA யிலிருந்து விலகிக் கொண்டார். இவரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு செய்தியாளர் துரை கருணா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முதலில் தமிழகம் வந்த மோடியினை சந்திப்பதற்கு நயினாருக்கு குறுஞ்செய்தி, அழைப்பு உள்ளிட்டவற்றை விடுத்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்பே எடப்பாடியிடமிருந்து அவருக்கு ஆர்டர் சென்றுவிட்டது. அதாவது ஓபிஎஸ் தரப்பில் யார் மோடியை பார்க்க அனுமதி கேட்டாலும் வழங்க கூடாது என கூறிவிட்டனர். இதனால் பன்னீர் செல்வம் மிகவும் அதிருப்தியில் மௌனம் காத்தே இருந்தார். ஆனால் அவரது நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இனி NDA கூட்டணியில் தொடர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தினர் அதன் பெயரில் உடனடியாக அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.
மேற்கொண்டு இவர் பாரத ஜனதா கூட்டணியில் இருந்தாலும் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க முடியாது. அதிமுகவுடன் கை கொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆனால் இம்முறை அது நடக்காது.மாறாக கட்சியை விட்டு வெளியேறியவர் திமுகவுடன் இணைய மாட்டேன் என்றும் கூறிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தது தான்.
அதிலிருந்து வந்து தற்போது மீட்பு குழுவை ஆரம்பித்திருக்கும் பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைய மாட்டார். ஆனால் திமுக மீது அதிருப்தியில் இணைந்திருக்கும் காங்கிரஸ், அதனைத்தொடர்ந்து பாமக போன்ற கட்சிகளுடன் இவரும் ஒன்றிணைந்து தவெக வை முன்னிறுத்தி திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியாக உருமாறும். இதனால் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்திற்கு கூட செல்லலாம் என கூறியுள்ளார்.