
NTK: மதுரை உயர்மறை மாவட்ட பேரயராக அந்தோணிசாமி பொறுப்பேற்றார். இவரை நேரில் கண்டு சீமான் வாழ்த்து தெரிவித்ததோடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தற்போது அரசியல் களம் என்ன என்பது குறித்து விவரித்து திமுகவை குற்றம் சாட்டி பேசினார். அதில், தமிழகம் தற்போது யாரிடத்தில் அடமானத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்?? தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் திமுக நாடகம் போடுகிறது. அதேபோல எங்களுக்கு கூட்டணி என்பது தேவையில்லை.
எங்களுடன் இருப்பது சுதந்திர பசி, என்னை போலவே என்னுடன் இருப்பவர்களும் உறுதியானவர்கள். சீட்டுக்காக கட்சி என்றால் தனி தனி கொள்கைகள் எதற்கு?? தமிழகத்தில் வட இந்தியர்கள் அதிகளவு வாக்கை பெற்று வருகின்றனர். இதனை முக்கிய குறிக்கோள் என்னவென்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். நாளடைவில் அவர்கள் தான் தமிழக அரசியல் களத்தை முடிவு செய்யும் நிலைக்கு வந்துவிடும். வட இந்தியர்கள் எப்பொழுதும் பாஜகவிற்கு சாதகமாக தான் இருப்பார்கள்.
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றெல்லாம் வந்துவிட்டால் எங்கிருந்தும் நமக்கு தண்ணீர் வராது, அதே நான் ஆட்சியில் இருந்தால் வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வர நுழைவு சீட்டு கேப்பேன். இந்தியா நாளுக்கு நாள் கடன்கார நாடாக மாறி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்மறாக இந்தியா வளர்ந்து வருகிறது எனக் கூறி நம்ப வைக்கிறார்கள். இது குறித்தெல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெற்று நல்லாட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு திமுக வேண்டாம் என்று அதிமுகவிற்கு அதிமுக வேண்டாம் என்று திமுகவிற்கு செல்வது பேயை விவாகத்து செய்து பிசாசை திருமணம் செய்வது போல் தான். மேற்கொண்டு புதிய கட்சியாக தவெக போன்றவை வந்தாலும் நிலையாக இருக்காது. கமலஹாசன் கட்சி எப்படியோ அப்படித்தான் அதுவும். விஜயகாந்திற்கு இல்லாத எழுச்சியா இவர்களுக்கு உள்ளது. திமுக அதிமுக என இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது, ஆனால் நான் பிரபாகரன் அண்ணன் வழியை சொல்கிறேன்.
அதேபோல அமெரிக்க அதிபர் இந்திய பொருள்களுக்கு வரி விதித்துள்ளார் இது வரவேற்கத்தக்கது இது ரீதியாக இந்திய அரசு கட்டாயம் விழித்துக் கொள்கிறதா என்பதை பார்க்கலாம். மற்ற கட்சிகளைப் போல எங்களால் ரோடு ஷோ நடத்த முடியாது மாறாக மக்களின் தேவை பூர்த்தி செய்ய நிறைய போராட்டங்கள் உள்ளது. அதேபோல அதிமுகவுடன் என்றும் உங்களது கூட்டணி இருக்காது தனித்தே தான் இருப்போம் எனக் கூறியுள்ளார்.