TVK DMK: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டமானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெருவாரியாக தென் மாவட்ட வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அந்தப் பொதுக்குழு கூட்டமானது மதுரையில் நடைபெற்றது. மேற்கொண்டு ரோடு ஷோ உள்ளிட்டவைகளையும் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. அப்போதையிலிருந்தே அவர்களுக்கு ஆளும் கட்சி சார்பில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக காவல்துறையை வைத்து அவர்களுக்குரிய அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தனர். இதே போல தான் பரந்தூர் விமான நிலையம் ரீதியாக விஜய் களமிறங்கிய போதும் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை, ஊருக்குள் செல்லக்கூட அனுமதி தரவில்லை.
இவ்வாறு திமுகவின் செயல்முறையானது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலுக்குள் புதிய கட்சியாக நுழைந்து பெரும்வாரியான ஆதரவுகளை திரட்டியுள்ள விஜய் தங்களுக்கு எதிராக பெரும் சாம்ராஜத்தை உருவாக்கி விடுவார் என்ற அச்சம் திமுகவுக்குள் புகுந்து விட்டது. இதனாலேயே விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தனர்.
அதுமட்டுமின்றி விஜய்யின் அரசியல் எதிரியாக திமுக உள்ள நிலையில் அவரின் திட்டங்கள் அறிந்து பொதுக்குழு கூட்டத்தையும் முன்கூட்டியே மதுரையில் நடத்தி முடித்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மாநாடானது தேதி மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.