
TVK DMK: தென் மாவட்டங்களில் அதிமுகவையும் கடந்து திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியது. வரப்போகும் தேர்தலில் மீண்டும் அதனையே நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி உள்ளது. ஆனால் அதை உடைக்கும் வகையில் விஜய் பல லாபகரமான திட்டங்களை தீட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் தென் மாவட்டத்தை குறிவைத்து உள்ளதாகவும், அந்த இடத்தை தேர்வு செய்து தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் திமுக இதனை முன்கூட்டியே கணித்து தனது பொதுக்குழு கூட்டத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் மதுரையில் நடத்தி முடித்து விட்டது. ஆனால் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு நகர விடக்கூடாது என்பதற்காக அவர்கள் குறித்த தேதியில் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். ஏனென்றால் இவர் மாநாடு நடத்தும் தேதிக்கு அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி என்பதால் ஏராளமான தொண்டர்கள் கூடுவது சாத்தியம்.
அதுவே தேதி மாற்றம் நடக்கும் போதும் அதற்கான வேலைகளில் பளு ஏற்படுவதோடு பெரும்பாலான தொண்டர்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் கூட உண்டாகலாம். இதனால் சம்பந்தமே இல்லாத 21ம் தேதிக்கு மாநாடு நடத்தும்படி அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என எண்ணுகின்றனர். ஆனால் விஜய் திமுகவின் அரசியல் வேரோடு சீர்குலைக்க நினைக்கிறார் என்பது இவரது அரசியல் நகர்வு வைத்து அறிந்து கொள்ள முடிகிறது.