தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0
118
Protest against sale of shares of Tamil Nadu rural banks
Protest against sale of shares of Tamil Nadu rural banks

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சேலம்

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது குறிப்பாக 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது 12 லட்சம் கோடி வணிகம் நடைபெற்று வரும் இந்த வங்கியின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது.

ஒன்றிய அரசு தமிழ்நாடு கிராம வங்கியின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது தொடர்ந்து கிராம வங்கிகளாகவே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் சங்கம் கிராம வங்கி ஊழியர் சங்கம் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவர் ஆண்டோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளர் அறிவுரை நம்பி அகில இந்திய தலைவர் அஸ்வத், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொருளாளர் லட்சுமி நாராயணன், அதிகாரிகள் சங்க செயலாளர் மெய்ஞான சேகர், உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Previous articleஇதுவரை எந்த அரசும் செய்யாத சாதனை.. தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த பிரதமர் மோடி!!
Next articleகுட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது