சென்னை:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது’அதிமுக கூட்டணியுடன் இருக்கின்றன மேலும் சுற்று பயணம் மேற்கொண்டும் கூட்டணி இணைக்கவும் முயற்சிக்கின்றன, திமுகவும் கூட்டணியில் இருக்கின்றார்கள் நீங்கள் தவெகயுடன் கூட்டணி இணையபோவதாக பலரும் கூறுகின்றன தவெகயுடன் இணைவீர்களா இல்லை மற்ற கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டன.
இந்த கேள்விக்கு பதில் கூறும்வகையில் அவர் கூறியதாவது,நடிகர் விஜய் அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார் இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுகள் குறைய வாய்ப்புகள் உள்ளன என பலரும் தவறான தகவல் பரப்பி வருகின்றன இதற்கு பயந்து நான் கூட்டணிக்கு ஓட மாட்டேன் நான் என் மக்களுக்கானவன் எனது தோல்வியும் வெற்றியும் மக்களுக்கானது என கூறியுள்ளார்.
இதுமட்டுமன்றி நான் கட்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே தனித்து தான் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்கிறேன் இது போன்று பல கட்சிகளை பார்த்துவிட்டேன் நான் செத்து சாம்பல் ஆனாலும் தனித்து தான் என் மக்களுக்காக போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.
மேலும் சீமான் அவர்கள் கோபி,சுதாகர் மீது வழக்கு போடுவதெல்ல்லாம் சமூக திண்டாமையை காட்டுகிறது சமூகத்தின் சாதி கொடுமையை காட்டுகிறது பெருமை என்பது எதில் இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும் சாதி, மதத்தில் ஒருபோதும் இருக்க கூடாது என கூறியுள்ளார்.