சென்னை:தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்காகவும்,தங்கள் பணியை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும்,ஊதியத்தை உயர்த்த வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு சுமார் 13 நாட்களாக இரவு பகல் பாராமல் கண்ணீருடனும்,வேதனையுடனும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தூய்மை பணியாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பட நடிகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் இதுமட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் மற்றும் இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேரில் சந்தித்தனர்.
13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தூய்மை பணியாளர்களை நடைபாதை மற்றும் சாலைமறித்து போராட்டம் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறைனர்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் நேற்று இரவு ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.இதனை பலரும் கண்டித்தனர் இவ்வாறு தூய்மை பணியாளர்களை கைது செய்ய பட்டதற்காக இன்று மார்க்சிஸ்ட் கட்சினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இதன் காரணமாக இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு இரவு, பகலாக நடந்த போராட்டத்திற்கு விடிவு காலம் கிடைத்தது போல் தூய்மை பணியாளர்களுக்காக 6 திட்டங்கள் ஒப்புதல் ஆகியுள்ளன.
6 திட்டங்கள்:தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது தோல் பிரச்சினை ஏற்படும் இதற்காக செலவையும் சிகிச்சையும் அளிக்க தனித்திட்டம் அளிக்கப்படும்
பணியின் போது மரணம் அடையும் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் கிடைக்க வழிவகுக்கப்படும் இதுமட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கிடைக்க திட்டம் செயல் படுத்தப்படும்.இதுபோன்று இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் ஒப்புதல் ஆகியிருக்கின்றது.
இந்த திட்டங்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது.