ADMK BJP: அதிமுக பாஜக இணைப்பிற்கு பின்பு பல்வேறு கட்சி சார்ந்த கோட்பாடுகள் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் அதிமுகவுடன் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கூட்டு சேர்க்க வற்புறுத்தக் கூடாது என்பதுதான் முதல் விதியே. நாளடைவில் ஒன்றுபட்ட அதிமுக தான் அதிக அளவு வாக்கு வங்கியை சம்பாதிக்கும் என பாஜக கூறியதால் டிடிவி தினகரனை வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் எடப்பாடி உள்ளார்.
ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் இணைக்க துளி கூட இடம் கொடுக்க ஒதுக்கவில்லை. இதன் வெளிப்பாடாக தமிழகம் வந்த பிரதமர், மத்திய மந்திரி என யாரும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் அவர் கோபமடைந்து கட்சியே வேண்டாம் என்று வெளியேறி விட்டார். ஆனால் பாஜக நிர்வாகிகள் அவரை விடுவதாக தெரியவில்லை. சமீபத்தில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், எடப்பாடி சீண்டும் விதமாக பேசியுள்ளார்.
அதில், டிடிவி தினகரன் உடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் கூடிய விரைவில் கூட்டணிக்குள் இணைவார். இவ்வாறு அவர் கூறியதற்கு செய்தியாளர்கள், ஏன் எடப்பாடி இது குறித்து வாய் திறப்பதில்லை என கேள்வி எழுப்பினர். அதிகாரப்பூர்வ சில ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் எடப்பாடி டிடிவி பெயரை பெயரை கூறுவார். அதேபோல அனைத்து கட்சி கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியது எடப்பாடிக்கு ஆர்டர் போட்டிருப்பது போல் உள்ளது. கூட்டணி அமைத்ததிலிருந்து தங்களுக்கு கீழ் தான் ஆட்சி என பாஜக கூறி வருகிறது. இதுவே அதிமுகவிற்கு பிடிக்கவில்லை. அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வரைமுறைகளையும் பாஜக மீறுவது தொடர் கூட்டணியில் நீட்டிக்குமா என்பதில் கேள்விக்குறி தான்.
கட்சி ரீதியாக எடப்பாடி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாஜக முடிவெடுப்பதை எடப்பாடி விரும்பவில்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கூட்டணிப் பிளவு ஏற்பட்டு அதிமுக மாற்றுக் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாம்.