IND vs PAK: பாகிஸ்தானின் பகல்ஹாம் தாக்குதலால் இந்தியாவை சீர்குலைந்து விட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எண்ணி ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தினர். மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் திட்டத்தையும் தடுத்து வைத்துள்ளனர். இங்கிருந்து ஒரு சொட்டு நீர் கூட பங்கு செல்லக்கூடாது என்ற விதி போடப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் பொறுக்க முடியாத பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் தொடர் தாக்குதலை இந்தியாவிற்கு எதிராக நடத்தினார். அவை அனைத்தும் சற்று கூட பிரதிபலிக்கவில்லை. மேற்கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டினரும் இந்தியாவிற்கு துணை நின்றனர். இதனால் அரண்டு போன பாகிஸ்தான் போரை கைவிட்டது. தற்போது சிந்து நதிநீர் குறித்து வெட்டி வசனம் பேசி வருகின்றனர்.
அதாவது சிந்து நதி நீர் எங்களுக்கு கொடுக்காவிட்டாலும் மேற்கொண்டு அணை கட்டினாலும் கட்டாயம் தீவிர பதிலடி கொடுக்கப்படும் என்று மிரட்டி வருகின்றனர். ஏனென்றால் பாகிஸ்தானில் 22 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த சிந்து நதி நீரை நம்பியுள்ளனர். மேற்கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீறும் சிந்து நதிக்கு எதிராக அணை கட்டினால் கட்டாயம் 10 ஏவுகளை ஏவி அதனை தகற்றுவோம் என கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இது என்ன இந்தியாவின் சொத்தா என்றும் கேட்டுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் இந்தியா சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை கைவிட்டால் மட்டுமே சிந்து நதி நீர் கிடைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.